இந்திய தபால் துறையின் சார்பில் கடிதம் எழுதும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக கடிதம் எழுதுவதின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டு தோறும் போட்டிகள் வைத்து பரிசு வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டிலும் மாணவர்களையும், பொதுமக்களையும் கடிதம் எழுதும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் மாரத்தான் தொடர் ஓட்டம் ராணிப்பேட்டையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தபால் துறையின் அரக்கோணம் கோட்ட கண்காணிப்பாளர் ஜெயசீலன் தலைமை தாங்கி, மாரத்தான் தொடர் ஓட்டத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
மாரத்தான் ஓட்டம் ராணிப்பேட்டை தலைமை தபால் அலுவல கத்தில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் தபால் அலுவலகத்திலேயே முடிவடைந்தது.
இதில் ராணிப்பேட்டை உட்கோட்ட கண்காணிப்பாளர் வம்சி ராமகிருஷ்ணன், வாலாஜா உட்கோட்ட ஆய்வாளர் ஞானசம்பந்தன், ராணிப்பேட்டை தலைமை தபால் நிலைய அதிகாரி பிரமிளா உள்பட தபால்துறை அலுவலர்கள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.