ஏன் இந்திய அணி பாகிஸ்தான் செல்லக் கூடாது? என பீகார் மாநில எதிர்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் கேள்வியெழுப்பியுள்ளார். செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த தேஜஸ்வி யாதவ், "விளையாட்டில் அரசியல் செய்வது நல்ல விஷயம் அல்ல. எல்லா நாடுகளும் ஒலிம்பிக்கில் பங்கேற்பதில்லையா ஆட்சேபனை இருக்கிறது என்றால் என்ன? பிரதமர் மோடி அங்கு சென்று பிரியாணி சாப்பிடலாம் என்றால் அது நல்லது, இந்திய அணி பாகிஸ்தானுக்கு பயணம் செய்தால் அது நல்லதில்லையா?" என்று பேட்டியளித்துள்ளார்.