ராணிப்பேட்டை டவுன் - Ranipet Town

ராணிப்பேட்டை: கால்நடைகளை சாலையில் திரியவிட்டால் அபராதம்

ராணிப்பேட்டை: கால்நடைகளை சாலையில் திரியவிட்டால் அபராதம்

ராணிப்பேட்டை நகரத்திற்கு கல்வி, வேலை, மருத்துவம் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக நாள்தோறும் ஆயிரக்க ணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் பெரும்பாலான முக்கிய சாலைகளில் வாகனங்கள் நிறைந்து காணப்படுகிறது. அவ்வாறு வாகனங்கள் வரும்போது சாலைகளில் ஆங்காங்கே கால்நடைகள் சுற்றித் திரிவதால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. சமீப காலமாக கால்நடைகள் அதிகமாக சாலைகளில் சுற்றி திரிவதால் ஆங்காங்கே விபத்துகளும் ஏற்படுவது வாடிக்கையாகி உள்ளது. எனவே ராணிப்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளை நகராட்சி ஊழியர்கள் மூலம் பிடித்து, அதன் உரிமையாளருக்கு ரூ. 1, 000 அபராதம் விதிக்கப்படும். பிடிக்கப்பட்டு உரிமை கோரப்படாத கால்நடைகள் இருந்தால் பொது ஏலம் அல்லது கோ சாலையில் ஒப்படைக்கப்படும் என ராணிப்பேட்டை நகராட்சி ஆணையாளர் பிரீத்தி தெரிவித்துள்ளார்.

வீடியோஸ்


నిర్మల్ జిల్లా