ராணிப்பேட்டை: குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது!

74பார்த்தது
ராணிப்பேட்டை: குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது!
ராணிப்பேட்டை மாவட்டம் , வாலாஜா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த தருண் (21) என்பவரை வாலாஜா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவரின் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் வளர்மதி ஓராண்டு குண்டர் தடுப்பு காவலில் வைக்க இன்று உத்தரவிட்டுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி