ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D. V. கிரண் ஸ்ருதி உத்தரவின் படி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார் (இணையவழி குற்றப்பிரிவு) அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 39 மனுக்கள் பெறப்பட்டன.
மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்தார்கள். இந்நிகழ்ச்சியில் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. வெங்கடேசன், (மாவட்ட குற்றப் பிரிவு) உடன் இருந்தார்.