ராணிப்பேட்டை மாவட்டம் கீழ் வீதி ஊராட்சியில் வேப்பூர் சாலையில் ரூபாய் 20. 40 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி மற்றும் ரூபாய் 11. 77 லட்சம் மதிப்பீட்டில் கல்வெட்டு கட்டும் பணிக்கு இன்று அடிக்கல் நாட்டு நடைபெற்றது. கைத்தறி துறை அமைச்சர் காந்தி கலந்து கொண்டு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார். இதில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா ஒன்றிய குழு தலைவர் வடிவேலு, திமுக ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், ரவீந்திரன் கலந்து கொண்டனர்.