CBSE பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவுபெற்று விடைத்தாள் திருத்தும் பணிகள் விறுவிறுப்புடன் நடந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் கடந்த ஆண்டை போல இல்லாமல் மே மாதத்தின் முதல் வாரத்திலேயே CBSE தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2024ம் ஆண்டில் மே மாதம் இரண்டாவது வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.