உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டம் ஆஷிவான் அருகே இளம் ஜோடிகள் ஒரே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலங்களை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது, இளம்பெண்ணுக்கு வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், 4 ஆண்டுகளாக காதலித்து வந்த ஜோடி ஒரே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.