தமிழ்நாடு பாஜக தலைவர் பதவிக்கான தேர்தல் குறித்த இன்று(ஏப்.10) வெளியா அறிவிப்பில் மாற்றம் செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. தலைவர் பதவிக்கு போட்டியிடுவோர் பாஜகவில் குறைந்தது 10 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகள் இடம்பெற்றிருந்தன. இது அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் ஆகியோர் போட்டியிடுவதில் சிக்கலை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கான விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டு புதிய அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.