கோவை கிணத்துக்கடவு அருகே செங்குட்டைபாளையத்தில் மாதவிடாய் ஏற்பட்ட மாணவியை வகுப்பறையில் அமர்ந்து தேர்வெழுத அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் இது குறித்த வீடியோ வைரலானது. இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை அளிக்க தனியார் பள்ளிகள் இயக்குனர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சம்பந்தப்பட்ட பள்ளியிடம், கோவை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர் ஆகியோர் விசாரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.