பிரிட்ஜ்ஸ்டோன் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஹிரோஷி யோஷிசேன் மீது, சக பயணி ஒருவர் சிறுநீர் கழித்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் அந்தப் பயணி விமானத்தில் பயணிக்க ஏர் இந்தியா தடை விதித்துள்ளது. இந்த சம்பவம் நேற்று (ஏப்.9) டெல்லி - பாங்காக் செல்லும் விமானத்தில் நடந்துள்ளது. சிறுநீர் கழித்த விவகாரத்தை பாங்காக் அதிகாரிகளிடம் எடுத்து செல்ல யோஷிசேனுக்கு உதவி வழங்கப்பட்டது. ஆனால் அவர் மறுத்துவிட்டதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.