பிரபல நடிகை சாந்தி பிரியா தனது தலையை மொட்டையடித்துக் கொண்டது ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், பெண்களான நாம் விதிகளின்படி செல்கிறோம். நம்மை நாமே கூண்டில் அடைத்து வைத்திருக்கிறோம். இந்த மாற்றத்தின் மூலம், நான் என்னை விடுவித்துக் கொண்டேன். என்று பதிவிட்டுள்ளார். சாந்தி பிரியா ராமராஜன் நடித்த எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தின் செண்பகமே என்ற பாட்டின் மூலம் தமிழ் ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.