கிரிண்டர் ஆப்-ஐ தடை செய்ய தமிழக அரசுக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் கடிதம் அனுப்பியுள்ளார். கிரிண்டர் ஆப் மூலம் சட்டவிரோத செயல்கள் அதிகரித்து வருவதாகவும், தொடர்ச்சியாக போதைப் பொருள் விற்பனை நடந்து வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், போதைப் பொருள் வழக்கில் கைதாகும் 10 பேரில் 5 நபர்கள் கிரிண்டர் ஆப் மூலம் அறிமுகமாகி விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர் என கூறியுள்ளார். இந்த ஆப்-ஐ உடனடியாக அரசு தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.