பீகாரைச் சேர்ந்த ஒரு இளம் பெண் கேரளாவின் எர்ணாகுளத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று அதிகாலை தனது சகோதரனுடன் தனது சொந்த ஊருக்குச் சென்றுள்ளார். அப்போது, பெங்களூரு கே.ஆர்.புரம் ரயில் நிலையத்தில், 2 மர்ம நபர்கள் அந்த இளம்பெண்ணின் சகோதரனைக் கட்டிப்போட்டுவிட்டு அவரைப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதையடுத்து, குற்றவாளிகள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.