சாலையில் மான் இறந்து கிடந்ததால் பரபரப்பு!

66பார்த்தது
சாலையில் மான் இறந்து கிடந்ததால் பரபரப்பு!
ராணிப்பேட்டை தெங்கால் கிராமத்தில் இருந்து விஷாரம் செல்லும் சாலையில் மான் ஒன்று இறந்து கிடப்பதாக ஊராட்சி மன்ற தலைவர் இந்திரா பத்மநாபனுக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அவர் வனத்துறை மற்றும் கால்நடைத்துறை அதி காரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் வனத்துறையினர், கால்நடை மருத்துவர் கவுரிபிரியாவுடன் சென்று மானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனை செய்தனர்.

தொடர்ந்து மானின் உடல் எரிக்கப்பட்டது. வனத்துறை அலுவலர் ஆனந்தன், வனக்காப்பாளர் ஹரிகிருஷ் ணன் ஆகியோர் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி