பேரணாம்பட்டு: 4 டன் ரேஷன் அரிசி வேனுடன் பறிமுதல்

66பார்த்தது
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே தமிழக எல்லையிலுள்ள பத்தலப்பல்லி போலீஸ் சோதனைச் சாவடியில் பேரணாம்பட்டு இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் தலைமையில், ஏட்டு ஜமுனா மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கர்நாடக மாநில பதிவெண் கொண்ட வேனை மடக்கி சோதனையிட்டனர்.

அதில் 4 டன் ரேஷன் அரிசியை ராணிப்பேட்டை மாவட்டத்திலிருந்து பத்தலபல்லி வழியாக கர்நாடக மாநிலம் கே. ஜி. எப். பகுதிக்கு கடத்தி சென்றது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து 4 டன் ரேஷன் அரிசியுடன், வேனை பறிமுதல் செய்தனர்.

ரேஷன் அரிசி கடத்தியதாக கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த வேன் டிரைவர் வருண் (21), சரண் (21), விஜய் (21) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரையும், ரேஷன் அரிசியையும் வேலூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீசாரிடம் பேரணாம்பட்டு போலீசார் ஒப்படைத்தனர்.

இதுசம்மந்தமாக குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் இந்திராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்

தொடர்புடைய செய்தி