தீபாவளி சிறப்பு அங்காடி.. ரூ.1,000 பொருள் ரூ.500க்கு விற்பனை

67பார்த்தது
தீபாவளி சிறப்பு அங்காடி.. ரூ.1,000 பொருள் ரூ.500க்கு விற்பனை
புதுச்சேரி அரசின் தீபாவளி சிறப்பு அங்காடியில், மானிய விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்பட இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். அதன்படி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி மாநில கூட்டுறவு நுகர்வோர் இணையம் சார்பில், தீபாவளி சிறப்பு அங்காடி-2024 மூலம் ரூ.1000 மதிப்புள்ள 10 பொருட்கள் ரூ.500க்கு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அம்மாநில மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.