1971-ல் எடுக்கப்பட்ட மக்கள்தொகை அடிப்படையில் 545 எம்.பி.க்கள் உள்ளனர். ஆனால் 2011 மக்கள் தொகை அடிப்படையை வைத்துப் பார்த்தால் 718 எம்.பி.க்கள் இருக்க வேண்டும். அதே சமயம் 2026 மக்கள்தொகையை கணக்கில் கொண்டால் 848 எம்.பி.க்கள் இருக்க வேண்டும். எனவே 2026-ம் ஆண்டுக்குள் மக்கள் தொகை கணக்கெடுப்பை முடித்து, 2028-க்குள் நாடாளுமன்ற தொகுதிகள் மறுவரையறை செய்யும் பணிகளை முடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.