நீலகிரி: ஊட்டியில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த அரசு தாவரவியல் பூங்காவில், ஆங்கில கவிஞர்களின் மனம் கவர்ந்த டபோடில்ஸ் மலர்கள் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இது கோடை சீசனில் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்து படைக்க உள்ளது. நெதர்லாந்து நாட்டின் முக்கிய மலராக திகழக்கூடிய டபோடில்ஸ் மலர்களை ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் அறிமுகப்படுத்த அந்த மலரின் நாற்றுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. 2 ஆயிரம் பூந்தொட்டிகளில் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.