பட்ஜெட்டுக்கு பிந்தைய கருத்தரங்கில் "விவசாயம் மற்றும் கிராமப்புற செழிப்பு" என்ற தலைப்பில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் நேற்று உரையாற்றினார். விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட முக்கிய ஆலோசனைகள் பட்ஜெட் முன்மொழிவுகளில் சேர்க்கப்பட்டு செயல்படுத்தப்படும் என்றார். இதனுடன், மக்கானா வாரியம் அமைப்பது தொடர்பாக பெறப்பட்ட ஆலோசனைகள் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.