கே. வி. குப்பத்தில் நடைபெற்ற ஆட்டு சந்தையில் விற்பனை மந்தம்

83பார்த்தது
வேலூர் மாவட்டம்

*கே. வி. குப்பத்தில் நடைபெற்ற ஆட்டு சந்தையில் விற்பனை மந்தம்*

வேலூர் மாவட்டம் கே. வி. குப்பம் சந்தை மேடு பகுதியில் வாரம் தோறும் திங்கட்கிழமை ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம் இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஆட்டு சந்தையில் நேற்று 400 மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்தது.

இந்த ஆட்டுச் சந்தையில் சந்தையில் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள், ஜமுனாபாரி ஆடுகள், சேலம் கருப்பாடுகள் பல்லாடுகள், நெல்லுார் கிடா ஆகிய பல்வேறு ரக ஆடுகள் வந்தது.

இதில் சிறிய ஆடுகள் ரூ. 6ஆயிரம் முதல் பெரிய ஆடுகள் ரூ15 ஆயிரம் வரை விலை போனது ஆடி மாத கடைசி வெள்ளி வரும் 16 தேதி வருவதால் ஆடுகள் அதிக விலை போகும் என எதிர்பார்த்து வந்த விவசாயிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
 
மேலும் நேற்று முன்தினம் இரவு முழுவதும் தொடர்ந்து மழைபெய்தால் கே. வி. குப்பம் ஆட்டுச் சந்தையில் விற்பனை மந்தமாக இருந்தது ஆடுகள் விற்க வந்த உரிமையாளர்கள், அதிகமாக இருந்தாலும் வியாபாரிகள் குறைவாக வந்ததாலும் விற்பனை மந்தமாக இருந்தது.

தொடர்புடைய செய்தி