முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மருமகன் முரசொலி செல்வம் (82) இன்று (அக்., 10) காலமானார்.
கருணாநிதியின் மருமகனும், முரசொலி மாறனின் சகோதரருமான முரசொலி செல்வம் பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். அவரது உடல் இன்று பிற்பகல் சென்னை கோபாலபுரம் இல்லத்திற்கு கொண்டு வரப்படவுள்ளது.
இவர், முரசொலியின் நிர்வாக ஆசிரியராகவும் பதவி வகித்துள்ளார்.