அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் முன்னாள் தலைவரான ஒசாமா பின்லேடன் 2011ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது இளைய மகனான உமர் பின்லேடன் பிரான்ஸில் உள்ள நார்மாண்ட் கிராமத்தில் 2016 முதல் வசித்துவந்தார். இந்நிலையில் சமீபத்தில் பயங்கரவாத செயல்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதால், உமர் பின்லேடனை நாட்டை விட்டு வெளியேறும்படி பிரான்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக ஆப்கானிஸ்தான், சூடான் நாடுகளிலிருந்தும் அவர் வெளியேற்றப்பட்டார்.