மனைவி, மகள் உட்பட 4 பேரைக் கொன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். கேரளாவின் வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்த கிரீஷ் (38) என்பவரை போலீசார் நேற்று (மார்ச் 28) கைது செய்தனர். மனைவி மேகி (30), மகள் காவேரி (5), மனைவியின் பெற்றோர் கரியா (75), கவுரி (70) ஆகியோரைக் கிரீஷ் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வந்த நிலையில், வயநாடு தாளப்புழாவில் வைத்து கைது செய்யப்பட்டார். குடும்பத்தகராறில் கொலை நடந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.