ஸ்டான்லி மருத்துவமனைக்குள் தெரு நாய்கள் தொல்லை.. நோயாளிகள் அவதி

52பார்த்தது
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தெரு நாய்களின் தொல்லையால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மருத்துவமனையின் புற நோயாளிகள் பிரிவில், சுமார் 20க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றித் திரிவதாக கூறப்படுகிறது. காலை நேரத்தில் புற நோயாளிகள் அதிகம் வரும் நேரத்தில் தெரு நாய்களின் தொல்லை இருப்பதாக நோயாளிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும், இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி