சென்னை கிளாம்பாக்கத்தைச் சேர்ந்த மாணவி தர்ஷினி. இவர் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் 2 முறை நீட் தேர்வு எழுதியும் போதிய கட்ஆப் மதிப்பெண்கள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் வருகிற மே மாதம் நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்து, அண்ணாநகரில் உள்ள தனியார் அகாடமியில் பயின்று தேர்வுக்கு தயாராகி வந்தார். தேர்வு அச்சம் காரணமாக தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.