மியான்மரில் ஏற்பட்ட அதி சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 700 ஆக உயர்ந்துள்ளது. 1,700 பேர் காயமடைந்துள்ளனர். மத்திய மியான்மரில் உள்ள சகாயிங் நகரின் வடமேற்கில் நேற்று (மார்ச் 28) வெள்ளியன்று 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் பல அடுக்குமாடி கட்டிடங்கள் சீட்டுக்கட்டு போல் சரிந்தன. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு மக்கள் சாலைகளில் அலறி ஓடினர். இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடக்கிறது. மேலும் பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளது.