
திருவலம்: ரயிலில் சிக்கி முதியவர் பலி
வேலூர் அடுத்த திருவலம்- வாலாஜா ரயில் நிலையங்களுக்கு இடையே நேற்றிரவு முதியவர் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த ரயிலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த காட்பாடி ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என விசாரித்து வருகின்றனர்.