காடுகளில் தீ வைப்போர் மீது கடும் நடவடிக்கை

74பார்த்தது
வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்கள் உள்ளடக்கிய மாவட்ட வன அதிகாரி குருசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில்

வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுமார் 1 லட்சம் ஹெக்டர் காடுகள் உள்ளது. சமிப காலமாக வேலூர், ஒடுகத்தூர் மற்றும் குடியாத்தம் ஆகிய வனப்பகுதிகளில் தீ விபத்து ஏற்ப்பட்டு வருகிறது

அதிக வெப்பம் மற்றும் சமுக விரோதிகளால் ஏற்ப்படும் இந்த காட்டு தீயை தடுத்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் தீயணைப்பு துறையினர் மற்றும் மற்றும் வனத்துறையினர் இணைந்து நடத்திய கலந்தாய்வு கூட்டத்தில் எடுத்த முடிவுகள் படி தீ தடுப்பு முன் யோசனைகள் நடைமுறை படுத்த பட உள்ளது.

இதே போல் தீ வைக்கும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கபட்டுள்ளது.
குடியாத்தம் பேரணாம்பட்டு வனப்பகுதியில் 16 யானைகள் அடங்கிய கூட்டம் உள்ளது. இந்த யானைகள் தண்ணீர் தேடி ஊருக்குள் வரமால் இருக்க, 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு, வனப்பகுதியில் ஆங்காங்கே நீர் தொட்டிகள் அமைக்கபட்டு தண்ணீர் நிரப்பபட்டு வரப்படுகிறது. இதனால் ஊருக்குள் யாணைகள் வருவது ஓரளவு கட்டுபடுத்த பட்டு உள்ளது. இதே போல் யானை கூட்டத்தால் சேதம் அடைந்த பயிர் உரிமையாளருக்கு நடப்பு ஆண்டு மார்ச் மாதம் வரை 32 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி