திரையரங்குகளில் விளம்பர நேரத்தைக் குறைத்த பிவிஆர்

70பார்த்தது
திரையரங்குகளில் விளம்பர நேரத்தைக் குறைத்த பிவிஆர்
இந்தியா முழுவதும் பல திரையரங்குகளைக் கொண்டுள்ள பிவிஆர்- ஐநாக்ஸ் நிறுவனம் குறைந்துவரும் பார்வையாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க புதிய திட்டத்தை செயல்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
படம் திரையிடுவதற்கு முன்பு 35 நிமிடங்களுக்கு ஒளிபரப்பாகும் விளம்பர நேரத்தை 10 நிமிடங்களாக குறைக்க திட்டமிட்டுள்ளது பிவிஆர்.இது குறித்து பிவிஆர் நிறுவனத்தின் லக்சுவரி கலெக்‌ஷன் பிரிவுத் தலைவர் ரெனாட் பாலியர், "விளம்பரங்கள் குறைக்கப்படுவது நேரத்தை மிச்சப்படுத்தி கூடுதல் காட்சிகள் திரையிட உதவும். கூடுதல் காட்சிகள் வழி பார்வையாளர்கள் எண்ணிக்கை கூடும்" எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி