வருஷத்துக்கு ஒரு படம்.. ஓகே சொன்ன விஜய் (வீடியோ)

60பார்த்தது
திரைப்பட விநியோகஸ்தர் சக்திவேலன் நடிகர் விஜய்யை நேரில் சந்தித்தார். கில்லி படத்தின் ரீ-ரிலீஸ் வெற்றிக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக சென்ற அவர், விஜய்க்கு பிரமாண்ட மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர், விஜய்யிடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதில், நீங்கள் ஆண்டுக்கு ஒரு படமாவது பண்ண வேண்டும். நீங்கள் அரசியலுக்கு சென்று மக்களுக்கு நல்லது செய்வது சந்தோசம். ஆனால், படத்தின் வியாபாரத்தையெல்லாம் தாண்டி உங்கள் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்காக நீங்கள் ஆண்டுக்கு ஒரு படம் நடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதற்கு விஜய் "சரி" என்று பதில் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி