வேளாண்மை படிக்கும் மாணவர்கள் எவ்வளவு பேர் விவசாயம் செய்வார்கள்?

67பார்த்தது
வேளாண்மை படிக்கும் மாணவர்கள் எவ்வளவு பேர் விவசாயம் செய்வார்கள்?
காட்பாடி வி. ஐ. டி. பல்கலைக்கழகத்தில் வேளாண்மைத்துறை சார்பில் உழவர் களஞ்சியம் எனும் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு இரண்டு நாட்கள் நடந்தது. இந்த கண்காட்சியில் 130 கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்நிகழ்வின் நிறைவுநாளில் சிறப்பு விருந்தினராக தமிழக அரசின் வேளாண் உற்பத்தித் துறை கமிஷனர் மற்றும் முதன்மை செயலாளர் அபூர்வா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது: தஞ்சாவூரைத்தான் நெல் களஞ்சியம் என்பார்கள். ஆனால் இன்று தமிழ்நாட்டுக்கே உணவு போடுவது வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் தான். வேளாண்மை படிக்கும் மாணவர்கள் எவ்வளவு பேர் விவசாயம் செய்வார்கள் என தெரியவில்லை.

உற்பத்தி திறனை நாம் அதிகப்படுத்த வேண்டும். காலநிலை மாறுபாட்டில் இருந்து விவசாயத்தை பாதுகாக்க வேண்டும். விவசாயத்திற்கு ஆள்பற்றாக்குறை அதிகமாக உள்ளது. விவசாயிகள் என்றால் 50 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தான் இருக்கிறார்கள். இந்த நிலை மாறி 20, 30 வயதிற்கு மேல் உள்ளவர்களும் விவசாயம் செய்ய முன் வர வேண்டும்.

குறுகிய கால பயிர்களை பயிரிட்டாலும், 6 மாத பயிர்களை பயிரிட்டு அறுவடை செய்ய வேண்டும். நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு இயற்கை விவசாயம் செய்ய வேண்டும், " என பேசினார்.

தொடர்புடைய செய்தி