கல்லூரி கணவு திட்டத்தை துவங்கி வைத்து ஆட்சியர் பேச்சு

61பார்த்தது
வேலூர்மாவட்டம், காட்பாடியில் உள்ள வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நான் முதல்வன் கல்லூரி கணவு திட்டத்தை மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார் இதில் 12 ஆம் வகுப்பிற்கு பின்னர் மாணவர்கள் என்ன படிக்கலாம் என்பதை விளக்கி கூறும் வகையில் இந்த நிகழ்ச்சியானது அமைந்தது மேலும் பல்வேறு அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களின் சார்பிலும் கண்காட்சியானது நடந்தது உயர் கல்வியில் என்னபடிக்கலாம் என இக்கண்காட்சியினை பார்த்து மாணவ, மாணவிகள் பயனடைந்தனர் இதில் மொத்தம் 1500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர் இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் விழாவில் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி பேசுகையில் நான்முதல்வன் திட்டம் உங்களுக்கு உதவுகிறது நுழைவு தேர்வுகளுக்கு செல்ல அரசு பள்ளி மாணவர்களுக்கு வேலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் பயிற்சி அளிக்கபடுகிறது உயர் கல்வியின் என்ன படிக்கலாம் என்பதற்காக கல்லூரி கணவு தேர்ச்சி பெறாத மாணவர்களையும் அடுத்த நிலைக்கு கொண்டு சென்று அவர்களின் வாழ்க்கை மேம்பாடு அடைய நான் முதல்வன் திட்டம் மேலும் வேலூர் மாவட்டம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் மேன்மை அடையும் அந்த நிலையை நாம் அனைவரும் உழைத்து மேம்படுத்துவோம் திருவள்ளூவர் கூற்றின் படி கல்வியை தவிர வேறு செல்வம் இல்லை என பேசினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி