தமிழக ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) நன்னிலம் மகளிர் நில உடமை திட்டத்தின் கீழ் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் விவசாய நிலம் வாங்குவதற்கு இந்தியன் ஒவர்சீஸ் வங்கி சார்பில் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. நிலத்தின் சந்தை மதிப்பீட்டின் படி அதிகப்பட்சம் ரூ. 5 லட்சம் வரை மானியம் விடுவிக்கப்படுகிறது. இது குறித்த கூடுதல் தகவலை www.tahdco.com என்ற முகவரியில் காணலாம்.