வள்ளி மலையில் சித்ரா பௌர்ணமி சிறப்பு வழிபாடு

74பார்த்தது
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுக்கா வள்ளிமலையில் மிகவும் பிரசித்தி பெற்ற சுப்ரமணியசாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி அன்று விசேஷ பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம் அதேபோல் நேற்று அதிகாலை முதலே சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது

முன்னதாக மலைக் கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு அதிகாலை 4 மணிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது அதனை தொடர்ந்து மலை அடிவாரத்தில் தனி சன்னதியில் வீற்றிருக்கும் ஸ்ரீ வள்ளி அம்மைக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது பின்னர் கீழ் கோயிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகசுவாமிக்கு விசேஷ அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு விபூதி காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீப ஆராதனை நடத்தப்பட்டது. இதில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வெற்றி வேல்முருகனுக்கு அரோகரா என கோசம் இட்டு சாமி தரிசனம் செய்தனர்.

மாவட்டம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருப்பதால் கோவில் நிர்வாகம் சார்பாக திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மோர் பானம் வழங்கப்பட்டது
மாலை 7 மணி அளவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது அதனை தொடர்ந்து பஜனை குழுவினர்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் வள்ளிமலையை சுற்றி கிரிவலம் வந்தனர்.

தொடர்புடைய செய்தி