திட்டப் பணிகளை விரைந்து முடிக்க மனு

75பார்த்தது
திட்டப் பணிகளை விரைந்து முடிக்க மனு
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வெல்பர் பார்ட்டி ஆப் இந்தியா சார்பில் நகராட்சி பகுதிகளில் நடைபெறும் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியும், சீரான குடிநீர் வழங்க கோரியும், தினந்தோறும் குப்பைகள் மற்றும் கால்வாய்களை சுத்தம் செய்ய வலியுறுத்தி நகராட்சி பொறியாளர் ராஜேந்திரனிடம் மாவட்ட தலைவர் ஃபசி அக்ரம் தலைமையில் கட்சியினர் தனித்தனியாக கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

அப்போது கட்சியின் மாவட்ட துணைத்தலைவர் எம். முஹம்மத் அய்யூப், மாவட்ட செயலாளர் டி. முஹம்மத் இப்ராஹீம், நகர தலைவர் வழக்கறிஞர் சையத் சலீம், நகர செயலாளர் கே. இம்ரான் அஹமத், நகர துணை செயலாளர் டி. முஹம்மத் இஸ்மாயில் உட்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி