திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்துவந்தவர் சாந்தி.
இவர் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய நபர்கள் மீதான வழக்கை முறையாக விசாரிக்கவில்லை என்றும் பஞ்சாயத்து நபர்களிடம் இதுகுறித்து பேசியதாகவும் புகார்கள் எழுந்தன.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் சாந்தி காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். தொடர்ந்து, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு புதிய இன்ஸ்பெக்டராக மலர் என்பர் நியமிக்கப்பட்டுள்ளார்.