டெல்லி சட்டமன்றத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்பை தலைவணங்கி பணிவுடன் ஏற்பதாக ஆம் ஆத்மி தலைவரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தேர்தலில் வெற்றி பெற்ற பாஜகவுக்கு வாழ்த்துகள். பாஜக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் என நம்புகிறேன். ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என கூறியுள்ளார். டெல்லியில் தொடர்ந்து 3 முறை வென்ற ஆம் ஆத்மி கட்சி இம்முறை பாஜகவிடம் ஆட்சியை பறிகொடுத்துள்ளது.