டெல்லி சட்டபேரவை தேர்தலில் பாஜக 45 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 36 இடங்கள் என்ற பெரும்பான்மைக்கு தேவையானதை விட அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளதால் பாஜக ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், பாஜக-வுக்கு வாழ்த்து தெரிவித்து குஷ்பு பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “ஊழல்வாதியும், திமிர்பிடித்தவருமான கெஜ்ரிவாலை மக்கள் தெளிவாக நிராகரித்து விரட்டியடித்துள்ளனர். மேலும், நமது பிரதமர் மோடி-யின் நல்லாட்சியை முழு மனதுடன் மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்” என தெரிவித்துள்ளார்.