டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் தொடர்ந்து 3வது முறையாக ஒரு இடத்தைக் கூட கைப்பற்றாமல் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை தழுவியுள்ளது. 1998 முதல் 2013 வரை டெல்லியை தன்வசம் தக்கவைத்து இருந்த காங்கிரஸ், 2015 மற்றும் 2020 சட்டசபை தேர்தல்களில் பெரும் சரிவுடன் தோல்வியை சந்தித்தது. இம்முறை ஒரு சில இடங்களையாவது கைப்பற்றும் என எதிர்பார்த்த காங்கிரசுக்கு ஒரு இடம் கூட கிடைக்காமல் மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.