கர்நாடக ஆரம்ப சுகாதார மையத்தில், கன்னத்தில் ஆழமான காயத்துடன் வந்த ஹோசாமணி (7) சிறுவனுக்கு செவிலியர் ஜோதி தையலுக்குப் பதிலாக FEVIKWIK பயன்படுத்தியுள்ளார். பெற்றோர் இதனை வீடியோ எடுத்து புகார் அளித்ததை அடுத்து, செவிலியர் இடைநீக்கம் செய்யப்பட்டு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அந்த வீடியோவில், முகத்தில் தழும்பு ஏற்படும் என்பதால் தையல் போடாமல் ஃபெவிக்விக் போடுகிறேன். இது போன்று நான் பல ஆண்டுகளாக செய்துவருகிறேன் என கூறியுள்ளார்.