1991-2000 வரையிலான ஜனவரி மாதத்தின் சராசரி வெப்பநிலையை ஒப்பிடுகையில் 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் 0.79 டிகிரி செல்சியஸ் கூடுதலாக பதிவாகி இருக்கிறது என ஐரோப்பிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் ஆர்டிக் கடல் பகுதியில் இந்த ஜனவரி மாதம் தான் மிகக் குறைந்த அளவில் பனி உருகி இருக்கிறது. இது சராசரியை விட 6% குறைவாகும். பொதுவாக ஜனவரி மாதம் குறைவான வெப்பநிலையே பதிவாகி வந்த நிலையில் இந்த வருடம் அதிகமான வெப்பம் பதிவாகியுள்ளது.