ரயில் பயணத்தின் போது உங்கள் டிக்கெட் தொலைந்து விட்டால் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவும். நகல் டிக்கெட்டிற்கு முதல் வகுப்பிற்கு ரூ.100 கட்டணம் வசூலிக்கப்படும். ஸ்லீப்பர் அல்லது இரண்டாம் வகுப்புகளுக்கு ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும். பயணங்களின் போது டிக்கெட் தொலைந்து விட்டாலோ கிழிந்தாலோ அல்லது சேதமடைந்தாலோ அதிகாரியிடம் தெரிவித்து பணம் செலுத்தி டூப்ளிகேட் டிக்கெட்டை பெற்று பயணத்தை எந்தவித தடையுமின்றி தொடரலாம்.