மலேசியாவில் நடைபெற்ற 19 வயதிற்குட்பட்ட மகளிருக்கான டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் கு. கமாலினி பங்கேற்று சாதனையைப் படைத்துள்ளார். அதனைப் போற்றிப் பாராட்டும் வகையில், கமாலினிக்கு உயரிய ஊக்கத் தொகையாக ரூ.25 லட்சம் வழங்கிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதேபோல், கோ கோ உலகக் கோப்பை போட்டிகளில் சாதனை படைத்த சுப்ரமணி போல மேலும் பல விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகளை ஊக்கமளிக்கும் வகையில், அவருக்கு உயரிய ஊக்கத் தொகையாக ரூ.25 லட்சம் வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.