அருங்காட்சியகத்தில் நடுகல் ஒப்படைப்பு!

71பார்த்தது
அருங்காட்சியகத்தில் நடுகல் ஒப்படைப்பு!
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கண்டிப்பீடு கிராமத்தில் சர்வே எண் 337/ 2D2 இல் வினோத்குமார் என்பவருக்கு சொந்தமான புஞ்சை நிலத்தில் நடுகல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.


இது குறித்து நில உரிமையாளர் காட்பாடி வட்டாட்சியர் சரவணனுக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் பேரில் காட்பாடி வட்டாட்சியர் நடுகல்லை வேலூர் கோட்டை வளாகத்தில் உள்ள வேலூர் அரசு அருங்காட்சியகத்தில் அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணனிடம் ஒப்படைத்தார்.

இந்த நடு கல்லானது 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. 47 சென்டிமீட்டர் அகலமும், 62 செண்டிமீட்டர் உயரமும் கொண்டுள்ள இந்த நடுக்கள் விரைவில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என்று அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணன் கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி