திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சிதிலமடைந்த பூங்காவை சுத்தம் செய்த பாஜகவினர் பொதுமக்கள் பாராட்டு.
பாரதிய ஜனதா கழகம் 1980 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு ஏறக்குறைய 50 ஆண்டுகளை நெருங்கி வரும் நிலையில் பாஜகவின் தலைமை கட்சி தொடங்கப்பட்ட ஏப்ரல் 6ஆம் தேதியான இன்று இந்தியா முழுவதும் உள்ள கோயில் திருத்தலங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சுத்தம் செய்ய கட்டளை இட்டதை தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட துணை செயலாளர் அன்பழகன் தலைமையில் இன்று புதியதாக பதவி ஏற்க இருக்கின்ற நகர செயலாளர் மேகநாதன் உட்பட அனைத்து பொறுப்பாளர்கள் சுத்தம் செய்வதற்காக நீண்ட நாட்களாக பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்து இருந்த திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 34 வது வார்டு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி ஒன்றில் இருக்கும் பூங்காவை தேர்ந்தெடுத்து அங்கே சுத்தம் செய்து ஏற்கனவே அங்கிருந்த மரக்கன்றுகளின் அடி பகுதியில் தூர்வாரி புதியதாக மரக்கன்றுகளை நட்டு கட்சிக்கு அப்பாற்பட்டு பொது நலத்தோடு செயல்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.