ஆற்காட்டில் நகராட்சி கூட்டம்!
ஆற்காடு நகராட்சி கூட்டம், நகர மன்ற தலைவர் எஸ். ஆர். பி. தேவி பென்ஸ் பாண்டியன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் டாக்டர் பவளக்கொடி சரவணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் 2-வது வார்டு தனலட்சுமி நகர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் பூங்காவிற்கு முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி பெயர் சூட்ட வேண்டும் என்று உறுப்பி னர் பொன். ராஜசேகர் கோரிக்கை மனு அளித்தார். கூட்டத்தில் ரூ. 24 லட்சத்தில் ஆற்காடு பேருந்து நிலையத்தின் உள் பகுதியில் பேவர் பிளாக் தரை அமைப்பது, 30 வார்டுகளிலும் உள்ள சிறு விசை பம்புகளை ரூ. 10 லட்சத்தில் பழுது பார்ப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகர மன்ற உறுப்பினர்கள் குணாளன், விஜயகுமார், ஆனந்தன், செல்வம், ராஜலட்சுமி துரை, அனு அருண்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.