ஆற்காடு: கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி கார்த்தி (33) என்பவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை (ஆயுள் தண்டனை) மற்றும் ரூ. 1,000 அபராதம் விதித்து ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தால் நேற்று தீர்ப்பு வழங்கியது. இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த காவலர்களுக்கு மாவட்ட எஸ்.பி. கிரண்ஸ்ருதி பாராட்டுகளைத் தெரிவித்தார்.