சேதமடைந்த சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை!

83பார்த்தது
சேதமடைந்த சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை!
நெமிலி அடுத்த அகவலம் கிராமத்திலிருந்து அகவலம் மோட்டூர் கிராமத்திற்கு செல்லும் 2 கிலோ மீட்டர் தூர சாலை சில ஆண்டுக்கு முன்னர் போடப் பட்டது. அந்த வழியாக சைக்கிள், மோட்டார் சைக்கிள், கார், பள்ளி வாகனம் என நூற்றுக் கும் மேற்பட்ட வாகனங்கள் தினமும் சென்றுவருகின்றன.

இதன் வழியாகத்தான் மருத்துவமனை, பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல வேண்டும். இந்த சாலை தற்போது சேதமடைந்து குண்டும், குழியுமாக கற்கள் பெயர்ந்து ஆபத்தான நிலை யில் உள்ளது. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குகிறது. சைக்கிள், மோட்டார் சைக்கிளில் செல்வோர் நிலைதடுமாறி கீழே விழும் நிலை ஏற்படுகிறது. அதன் காரணமாக வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர்.

சேதமடைந்த சாலையை சீரமைக்க பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே விபத்தை தடுக்க புதிய சாலை அமைக்க துறை சார்ந்த அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி