ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுகா மேல்நெல்லி கிராமத்தில் பாஸ்கர் என்பவருக்கு சொந்தமான 60 ஆடுகள் வீட்டின் அருகில் உள்ள கொட்டகையில் கட்டி வைக்கப்பட்டு இருந்தது. இதில் 7 ஆடுகள் வெறிநாய்க்கடித்து இறந்து கிடந்தன. இது குறித்து வருவாய் மற்றும் கால்நடைத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கால்நடைத்துறை மருத்துவர்கள் விரைந்து வந்து பிரேத பரிசோதனை செய்தனர்.